ஆசிய கோப்பை 2023: விறுவிறுப்பான கட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதல்..!!



India-Sri Lanka will play a multi-test in the Super-4 round of the 16th Asia Cup cricket series.

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்தியா-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றன.

லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்க தேச அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

சூப்பர்-4 சுற்றில் இதுவரை இலங்கை அணி தனது முதலாவது போட்டியில் வங்க தேசத்தையும், இந்திய அணி தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நேற்று முன்தினம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றுநாளான நேற்று முடிவடைந்தது.

இந்தியா-இலங்கை அணிகள் தலா 1 வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி இவ்விரு அணிகளுக்கும் முக்கியமானது. இலங்கை அணி கடைசியாக விளையாடிய 13 போட்டிகளிலும் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் களமிறங்கும். இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை பந்தாடிய உத்வேகத்துடன் களமிறங்கும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 165 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில், இந்திய அணி 96 போட்டிகளிலும், இலங்கை அணி 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டி சமனில் முடிந்த நிலையில், 11 போட்டிகளில் முடிவில்லை .