#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணியில் முன்னணி வீரரை கழட்டிவிடத் தயாரான கேப்டன்.! வெளியே கசிந்த ரகசியம்.!
நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 T20 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று சாதனை படைத்தது. ஆனால், 3 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்று அதிர்ச்சி கொடுத்தது. மேலும், முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோற்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணியின் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடததே தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில், நாளை மறுநாள் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில் உள்ளது இந்திய அணி.
இதனால், அணியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாகவும், மூத்த வீரர் அஸ்வின் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஜடேஜாவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த டெஸ்ட் போட்டியில், மூன்று விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றிய அஸ்வின், பேட்டிங்கில் மிக சொதப்பலாகவே விளையாடினார். முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன அவர், 2-வது இன்னிங்ஸில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜடேஜா பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் கைகொடுப்பார் என நம்பப்படுவதால் அஸ்வின் நீக்கப்பட்டு ஜடேஜா சேர்க்கப்பட்ட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.