#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணி சிறப்பான தொடக்கம்; இமாலய இலக்கை நிர்ணயிக்க பிரகாசமான வாய்ப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இருவரும் அரைசதம் கடந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அணி நாடு திரும்பாமல் அப்படியே நியூசிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3T20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. நியூசிலாந்து அணியை பொறுத்த வரையில், சாண்டனருக்கு பதில் சோதி சேர்க்கப்பட்டார். சவுத்திக்கு பதிலாக கிராண்ட்ஹோமே அணியில் இடம் பெற்றுள்ளார்.
முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்திய அணியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வின் செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இதன்படி இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் மிகவும் நேர்த்தியாகவும் பொறுமையாகவும் விளையாடி வருகிறார்கள். அதேவேளையில் அடிக்க வேண்டிய லாவகமான பந்துகளை சிக்சராகவும் பவுண்டரிகளாகவும் மாற்ற தயங்குவதில்லை. இந்த நிலையில் இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்தார்கள்.
ஆனால் எதிர்பாராத விதமாக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான் 66(67) ரன்களில் 25.2 ஆவது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 9 பவுண்டரிகளை விளாசினார் அதன்பிறகு களமிறங்கிய விராட் கோலி 1 ரன் ரோகித் சர்மா 85 ரன்களுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
முடிவில் இந்திய அணி 27 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது 158 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 9 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் மீதமுள்ள ஓவர்களில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் இந்திய அணி எளிதாக 300 ரன்களை கடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.