மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொடர்ந்து இரண்டு தோல்வி.. ஆறுதல் வெற்றி முனைப்புடன் களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ்..! கடைசி போட்டியில் வெல்லப்போவது யார்?
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கவுள்ளது.
ஏற்கனவே இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்த போட்டியில் இதுவரை ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கொரோனாவில் குணமடைந்த ஷிகர் தவான் இப்போட்டியில் ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது. தவான், இந்த ஆட்டத்தில் விளையாட இருப்பதால் மிடில் வரிசையில் தீபக் ஹூடா நீக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
பேட்டிங்கை பொறுத்தவரை முதல் இரு ஆட்டங்களிலும் விராட் கோலி ஏமாற்றினார். இந்த ஆட்டத்திலாவது அவர் பழைய ஆட்டத்தை காட்டுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து ஆறுதல் வெற்றி முனைப்புடன் களம் காணும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.