#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த பரபரப்பான T20 இறுதி போட்டி!. மைதானத்தை நோக்கி குவியும் ரசிகர்கள்!.
இந்தியா- மேற்கிந்தியதீவு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 71 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இந்த ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கில், ரோகித் தலைமையிலான இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
மேற்கிந்திய தீவு அணி தொடரை இழந்தாலும் ஆறுதல் வெற்றிக்காக, இறுதி ஆட்டத்தை வென்றே ஆகவேண்டும் என்ற நோக்கில் கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்திலும் 71 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.
இந்த ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியினை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை நோக்கி குவிகின்றனர்.