#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்தியாவின் வெற்றிக்கு காரணமான அந்த நான்கு விக்கெட்டுகள்! எல்லாத்துக்கும் அவர்தான் காரணம்!
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய அணி நாடு திரும்பாமல் அப்படியே நியூசிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் 3T20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் மிகவும் நேர்த்தியாகவும் பொறுமையாகவும் விளையாடி வருகிறார்கள். அதேவேளையில் அடிக்க வேண்டிய லாவகமான பந்துகளை சிக்சராகவும் பவுண்டரிகளாகவும் மாற்ற தயங்குவதில்லை. இந்த நிலையில் இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்தார்கள்.
ஆனால் எதிர்பாராத விதமாக சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான் 66(67) ரன்களில் 25.2 ஆவது ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 9 பவுண்டரிகளை விளாசினார். அவரைத் தொடர்ந்து 30வது ஓவரில் ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் சிறப்பாக ஆடிய கேப்டன் கோலி மற்றும் 52 அரை சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்து 43 மற்றும் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் கடைசியாக இறங்கிய கேதர் ஜாதவ் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். அவருடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டோனி 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக ஆடத் துவங்கினார். அதே சமயம் அவர்களது விக்கெட்டுகள் மளமளவென சரிய துவங்கியது. அந்த அணியின் பிரேஸ்வெல் மட்டும் 57 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக நியூசிலாந்து அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இந்திய அணியின் சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் மற்றும் சாகல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குல்தீப் யாதவ் கைப்பற்றிய நான்கு விக்கெட்டுகள் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமா அமைந்தது. ஆட்ட நாயகனாக ரோகித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா முதல் இரண்டு போட்டிகளில் வென்று முன்னிலையில் உள்ளது.