மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை மளமளவென சரித்த இந்திய வீரர்..! 2வது டெஸ்டில் இங்கிலாந்தை ஊதி தள்ளிய இந்திய அணி.!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 12 ஆம் தேதி துவங்கியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, லோகேஷ் ராகுலும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 129 ரன்களும்,ரோஹித் சர்மா 83 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 128 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 391 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இதனை தொடர்ந்து 4வது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், இந்தியா தனது 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றுமுன்தினம் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 82 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை எடுத்து இருந்தது. இதனையடுத்து நேற்று விளையாடிய இந்திய அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் குவித்த நிலையில் இன்னிங்சை டிக்ளர் செய்து இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட 271 ரன்கள் முன்னிலையில் இந்தியா இருந்தது.
இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான நேற்று 60 ஓவர்கள் எஞ்சியுள்ள நிலையில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. இதில் 51.5 ஓவரில் இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இறுதியில் ஆட்டம் கொடுத்த இங்கிலாந்து அணி வீரர்களை சிராஜ் வீழ்த்தி ஆட்டத்தை முடித்தார். இந்திய அணியில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டுகளையும், ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.