96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சிங்கத்தை, சிங்கத்தின் குகைக்கே சென்று வேட்டையாடிய இந்திய அணி.! கெத்து காட்டிய இந்திய அணியின் முக்கிய இளம் வீரர்கள்.!
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேமூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்தநிலையில், 1 - 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ள இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதில் இரு அணிகளும் முனைப்பாக இருந்தன.
இந்தநிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 369 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்தியா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்தது. பின்னர் 33 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் ஆஸ்திரேலிய அணி 294 ரன்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி மிகவும் நேர்த்தியாக ஆடி இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த சிட்னி டெஸ்ட் போலவே இந்த போட்டியையும் இந்திய அணியை ட்ரா செய்ய முயலும் என நினைத்த ஆஸ்திரேலியாவுக்கு பேரிடியாக இந்திய அணி அதிரடியாக விளையாடி கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற இளம் வீரர்களான நடராஜன், தாக்கூர், வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் முக்கியக் காரணிகளாக அமைந்துள்ளனர். ரிஷப் பண்ட் 89 ரன்களை எடுத்து ஆட்டத்தின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகன் விருதை கம்மின்ஸ் தட்டிச்சென்றார்.