#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொடரை வெல்லுமா இந்திய அணி.. டாஸ் வென்று இந்திய அணி பௌலிங் தேர்வு..!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் பரபரப்பாக நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் மிகவும் மோசமாக பந்து வீசிய சர்த்துல் தாகூருக்கு பதிலாக உம்ரான் மாலிக் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டியில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.
ஏற்கனவே முதல் போட்டியில் போராடி வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கும் இந்திய அணி இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது. இந்தப் போட்டியை வென்று எப்படியாவது தொடரினை சமன் செய்து விட வேண்டும் என்று சமபலம் வாய்ந்த நியூசிலாந்து அணி களம் இறங்குவதால் இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.