தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
விராட் கோலியின் திறமையை கண்டு பிரமித்து நிற்கும் தமிம் இக்பால்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் செயல்பாடு குறித்து அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் வங்கதேச அணியின் வீரர் தமிம் இக்பால் இவரது பேட்டிங் திறமையை கண்டு இவர் ஒரு சராசரி மனிதனா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று தனது பிரமிப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளையும் வென்ற இந்திய அணி முதல் ஒரு நாள் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி இன்னும் 81 ரன்கள் எடுத்தால் 10,000 ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார். அவர் 204 இன்னிங்சுகளில் இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து வங்கதேச அணியின் வீரர் தமிம் இக்பால் கூறும்போது: இந்திய கேப்டன் கோலியின் செயல்பாடு, சில சமயம் அவர் மனிதனா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. பேட்டிங் செய்ய களமிறங்கும் நிமிடத்தில், எல்லா போட்டியிலும் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் எழுகிறது. இதை நம்புவது கடினமாக உள்ளது. குறிப்பாக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் கோலி இப்படி செய்வது ஆச்சரியமக உள்ளது.’ என்றார்.