அடேங்கப்பா! விராட் கோலி குடிக்கும் 1.லி தண்ணீரின் விலை என்ன தெரியுமா? தலையே சுற்றுகிறதே.!
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார் என்பது நன்கு அறிந்ததே. மேலும் கோலிக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகள்கள் ஏராளமாக உள்ளனர்.
ரன் மெஷின் என பலரால் அழைக்கப்படும் விராட் கோலி உண்மையில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறார். 30 வயதாகும் கோலி 227 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10843 ரன்களும், 41 சதங்களும் அடித்துள்ளார். 49 சதங்கள் அடித்துள்ள சச்சினுக்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார்.
இவ்வாறான சாதனைகள் பல படைத்தாலும் விராட் கோலியை மற்றவர்களுக்கு பிடிக்க முக்கிய காரணம் அவரது பிசிக்கல் பிட்னஸ் என்று கூறலாம். தனது உடல்வாகை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மிகக் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களிலேயே பிசிக்கல் பிட்னஸில் விராட் கோலி தான் சிறந்தவர் என்று கூட கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை ஒரு லிட்டர் 600 ரூபாயாம். பிரான்ஸில் உள்ள எவியன் நிறுவனத்தின் தண்ணீர் பாட்டில்கள் கோலிக்காக வரவழைக்கப்படுகிறது. தண்ணீரை பில்ட்டர் செய்யும்போது மினரல் சத்துகள் வடிகட்டப்படும் இதனால் முழு மினரல் சத்துகள் நமக்கு கிடைப்பதில்லை. எவியன் மினரல் வாட்டர் மிகுதியான மினரல் சத்துகள் கிடைக்கிறது. அதனால் தான் இதன் விலை கூடுதலாக இருக்கிறதாம்.
பனி படர்ந்த மலைகளில் உற்பத்தியாகும் நீரை இயற்கையான முறையில் பில்ட்டர் செய்து எவியன் நிறுவனம் குடிநீராக வர்த்தகப்படுத்துகிறது. இந்த நீரை பிரான்ஸ் மெடிக்கல் அகாடமி பரிசோதித்துத் தரச்சான்றிதழை வழங்கியிருக்கிறது.