3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
பிசிசிஐயின் கட்டுப்பாட்டை மீறிய முன்னணி வீரர்! அம்பலமானது உலககோப்பை தொடரில் நடந்த ரகசியம்
நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் அணியின் முன்னணி வீரர் ஒருவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி தனது குடும்பத்துடன் வசித்து வந்த உண்மை இப்போது வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்பே மே மாதம் பிசிசிஐ கூட்டத்தில் இந்திய அணியின் வீரர்கள் உலக கோப்பை தொடரின் போது 15 நாட்கள் மட்டுமே தங்களது குடும்பத்தினருடன் தங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதுவும் ஜூன் 16-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகே அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அந்த சமயத்திலேயே இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவர் தொடர் முழுவதும் அவரது குடும்பத்தினருடன் வசிக்க வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் பிசிசிஐ இதனை மறுத்துள்ளது. ஆனால் அதே வீரர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்ற ஏழு வாரங்களும் அவரது குடும்பத்தினருடன் வசித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில் இதனைக் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் விளையாடும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கத் தவறிய அணியின் மேலாளர் சுனில் சுப்பிரமணியனையும் பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் பிசிசிஐயின் கட்டுப்பாட்டை மீறிய அந்த சீனியர் வீரர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இது முழுவதும் நிரூபிக்கப்பட்டால் அந்த வீரருக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.