விராட் கோலியின் இடத்தை பிடித்ததில் பெரும் ஆச்சரியம் தான் - பிரபல இந்திய வீரர்.!



indian cricketers viraht kohli - vijay shanker

இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி கடைசி பந்து வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணியில் பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யும்பொழுது நடைபெற்ற ஒரு சில தவறுகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.

இந்த போட்டியில் இந்திய அணி வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது. முதலில் பந்து வீசிய இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. கிட்டத்தட்ட 3 கேட்சுகள் தவறவிடப்பட்டன. ஒரு சில பவுண்டரிகளையும் தடுத்திருந்தால் நிச்சயம் நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்து இருக்க முடியாது. மேலும் பேட்டிங்கிலும் ஒரு சில முக்கியமான தருணங்களில் ரன்களை எடுக்கத் தவறியது மற்றும் விக்கெட்டுகளை இழந்தது தான் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.

cricket

இப்போட்டியில் கோலியின் பேட்டிங் இடமான மூன்றாவது இடத்தில் களமிறங்கியது, தனக்கே ஆச்சரியமான விஷயம் தான் என இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில், ‘என்னை மூன்றாவது வீரராக களமிறங்க சொன்ன போது ஆச்சரியமாக தான் இருந்தது. இது கோலியின் பேட்டிங் இடம், இது கிடைத்தது மிகப்பெரிய விஷயம். அதனால் மிகவும் கவனமாக விளையாடினேன். இந்திய அணிக்காக எந்த இடத்திலும் விளையாட தயாராக உள்ளேன். 

cricket

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். பெரும்பாலும் நான் அதிக அளவில் பவுலிங் செய்வது இல்லை. தற்போது புது சூழ்நிலையில் பவுலிங் செய்தது மூலம் பல விஷயங்கள் புரிந்தது. அதே போல பேட்டிங்கில் சீனியர்களான கோலி, ரோகித் சர்மா, தோனி எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பார்த்து புது நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். இனியும் தொடர்ந்து பேட்டிங்கில் முன்வரிசை வீரராக களமிறங்கவே விரும்புகிறேன்.’ என்றார்.