#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணியின் பிரபல வீரர் ஓய்வை அறிவித்துள்ளார்!. கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி!.
இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளராக சர்வதேச போட்டிகளில் ஆடிய ஆர்.பி. சிங் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இடது கை வேகப் பந்துவீச்சாளரான ஆர்.பி. சிங் 2005ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை இந்திய அணியில் உள்ளார்.
இந்திய அணியில் சிறப்பாக ஆடிய ஆர்.பி. சிங், சிலவருடங்களுக்கு முன் பார்ம் அவுட் காரணங்களால் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சில ஆண்டுகள் ஆடினார்.
கடந்த ஆண்டு வரை உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த ஆர்.பி சிங் தன் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 14 டெஸ்ட், 58 ஒருநாள் போட்டிகள், 10 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
இதுவரை ஆடிய போட்டிகளில் ஆர்.பி. சிங் டெஸ்ட் போட்டியில் 40 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில், 69 விக்கெட்களும், டி20 போட்டிகளில் 15 விக்கெட்களும் எடுத்துள்ளார்.