கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
சூறாவளியாய் மாறிய மந்தனா! மற்றவர்களின் மந்தமான ஆட்டத்தால் இந்தியா படுதோல்வி
இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் ஒரே நேரத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடிய இரு அணிகளுமே தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிர் அணிகளுக்கான முதல் T20 போட்டியில் இந்திய மகளிர் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் டிவைன்( 62), சாட்டர்த்வெய்ட்(33), ஹாத்தி மார்டின்(27) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீராங்கனை பிரியா ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தார் ரோட்ரிஹியூஸ்.
இருவரும் எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய மந்தனா 24 பந்துகளில் அரைசதமடித்தார். இந்திய மகளிர் அணியில் மிக விரைவில் அடிக்கப்பட்ட அரைசதம் இதுவே ஆகும். ஆனால் சிறப்பாக ஆடிய மந்தனா 58 ரன்னில் ஆட்டமிழக்க ரோட்ரிஹியூசும் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. 102 ரன்னிலிருந்து 120 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஹர்மந்த்பிரீத் கௌரும் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய இந்திய மகளிர் அணி 19.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.