#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கிங் கோலியின் கடைசி முயற்சியாவது கை கொடுக்குமா? களமிறங்கும் புயல் வேக வீச்சாளர்; யார் தெரியுமா?
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 25 போட்டிகள் முடிவு பெற்றுள்ளது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்ல தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை தோற்கடித்து சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.
பல போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஐபிஎல் தொடரானது, தற்போது மைய நிலையில் உள்ளது. இந்நிலையில் தாங்கள் பங்கேற்று விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது பெங்களூரு அணி. இதனால் பெங்களூரு ரசிகர்கள் அந்த அணி மீது மிகப்பெரிய அதிர்ச்சியில் உள்ளார்கள்.
பெங்களூரு அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் ஓரளவு வலிமையாக இருந்தாலும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் அந்த அணி மிகவும் மோசமாக பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனால் வரக்கூடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற கட்டாய நிலையில் உள்ளது.
இந்த சீசனில் பெங்களூரு அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் கூல்டர் நைல் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் பாகிஸ்தான் தொடரின் போது முதுகுப்பகுதில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
இதனால் இவருக்கு பதிலாக ஏலத்தில் போது யாரும் கண்டு கொள்ளாத தென் ஆப்ரிக்க ஆக்ரோஷ அனல் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டைனை மாற்று வீரராக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்டைன் சுமார் 2 ஆண்டுக்கு பின் ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
கடைசியாக கடந்த 2016ல் குஜராத் லயன்ஸ் அணிக்காக பங்கேற்றார். தவிர, பெங்களூரு அணிக்காக டேல் ஸ்டைன் கடந்த 2008 - 2010 ஆண்டுகளில் 28 போட்டிகளில் விளையாடியுள்ளார்.