ரசிகர்கள் தல தலன்னு ஏன் கூப்பிடறாங்க? தோனியின் உணர்ச்சிகரமான பேச்சு.!



ipl-2019---thala-dhoni---csk-fans---stadium-labours

ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், டெல்லி அணி முதல் இடத்திலும் இருந்தன. இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணி மோதும் 2வது ஆட்டம் நேற்று சென்னையின் சொந்த மண்ணில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. தனது அணிக்காக தல தோனி அதிரடியாக ஆடி 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் கடைசிவரை அட்டமிழக்காமல் 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

IPL 2019

இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் நீண்ட நேரம் களத்தில் நின்று 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார்.

இதனால் ஆட்டத்தின் 17 வது ஓவரிலேயே, 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, டெல்லி அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சென்னை அணியின் இந்த வெற்றியினால் புள்ளிபட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.



 

போட்டி முடிந்த பின்னர் பரிசளிப்பு விழாவில் பேசிய தல தோனியிடம், போட்டி முடிந்து விட்டது ஆனாலும் ஒரு ரசிகரும் மைதானத்திலிருந்து வெளியே செல்லவில்லை. அதோடு ஏன் உங்களை ‘தல’ன்னு அழைக்கிறார்கள் என கேட்கப்பட்டதால் அரங்கமே அதிர்ந்தது.

இதற்கு பதிலளித்த தோனி, “எனக்கு முதலில் புதிதாகதான் இருந்தது. சிஎஸ்கே டைட்டில் பாடலில் கூட தலன்னு இடம்பெற்றுள்ளது. அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் நான் எங்கு சென்றாலும் என்னை தோனிக்கு அழைப்பதற்கு பதிலாக, தலன்னு கூப்பிடுகிறார்கள். 



 

நானும் அவர்களின் அன்பை புரிந்து கொண்டேன். அதே போல் சென்னை அணி ரசிகர்கல் எனக்கு மட்டுமல்லாமல் மற்ற வீரர்களுக்கும் மிகுந்த ஊக்கம் அளிக்கின்றனர். ரசிகர்கள் தான் எங்களின் பலம். அவர்களுக்காக நாங்கல் நிறைய கடமைப்பட்டிருக்கின்றோம்.” என உணர்ச்சி பொங்க பேசினார். 

நேற்று மே தினம் உழைப்பாளர் தினம் என்பதால், சென்னை மைதான ஊழியர்கள் அனைவருடன் சேர்ந்து தோனி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதோடு தோனியும் மற்ற வீரர்களும் ரசிகர்களுக்கு சென்னை ஜெர்சி, பந்துகள், தொப்பி ஆகியவற்றை பரிசாக வழங்கினர்.