பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடேங்கப்பா! முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளின் பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
ஐபில் சீசன் 12 கோப்பையை கைப்பற்றி சாம்பியன் படத்தை தட்டிச்சென்றது மும்பை அணி. நேற்று நடந்த இறுதி போட்டியில் மும்பை அணி சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் நான்கு முறை ஐபில் கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது மும்பை அணி.
இதன்மூலம் முதல் இடத்தை பெற்ற மும்பை அணிக்கு ஐபில் கோப்பையை வென்றதோடு 20 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அதேபோல சென்னை அணி இரண்டாவது இடத்தை பிடித்து 12 . 5 கோடி பரிசு தொகையை வென்றது.
பிலேஆப் வரை வந்த டெல்லி அணி மூன்றாவது இடத்தையும், கைதராபாத் அணி நான்காவது இடத்தையும் கைப்பற்றியது. இதன் மூலம் மூன்றாவது இடத்தை பிடித்த டெல்லி அணி 10 . 5 கோடி பரிசு தொகையையும், நான்காவது இடத்தை பிடித்த ஹைதராபாத் அணி 8 . 5 கோடி பரிசு தொகையையும் கைப்பற்றியது.