#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணியின் கேப்டனும், துனை கேப்டனும் மோதல்! முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார்?
2019 ஐபிஎல் தொடர் கடந்த 23ஆம் தேதி முதல் துவங்கி ரசிகர்கள் ஆதரவுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஏழாவது போட்டியில் இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த சீசனில் இதுவரை நடைபெற்றுள்ள ஆறு போட்டிகளில் கொல்கத்தா, சென்னை அணிகள் இரண்டு போட்டிகளில் வென்று முதல் இரண்டு இடங்களில் உள்ளன. டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் தலா ஒரு போட்டியில் வென்று அடத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளன. ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு, மும்பை அணிகள் தங்கள் வெற்றி கணக்கை இன்னும் துவங்கவில்லை.
இன்று பெங்களூருவில் நடைபெறும் ஏழாவது போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் தங்கள் வெற்றி கணக்கை துவக்கும் முனைப்பில் இன்று ஆடவுள்ளன.
இந்திய அணியின் கேப்டன் கோலியும், துனை கேப்டன் ரோகித் சர்மாவும் இந்த போட்டியில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.