#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னை அணியைவிட்டு வெளியேற்றப்பட்ட வாய்ப்புள்ள மூன்று முக்கிய வீரர்கள்!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது. டெல்லி, கைதராபாத் அணிகள் இடையே நடைபெறும் ஆட்டம் இன்று இரவு 7 . 30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த சீசனை பொறுத்தவரை சென்னை அணி சிறப்பாக விளையாடிவந்தாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில முக்கிய வீரர்கள் ஆரமப்பதில் இருந்தே சொதப்பி வருகின்றனர். ஏறக்குறைய இந்த வீரர்கள் அடுத்த வருடம் சென்னை அணியை விட்டு வெளியேற்றப்பட்ட அதிக வாய்ப்புள்ளது.
1 . வாட்சன்
ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரராக வாட்சன் சென்னை அணியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வீரர். ஆனால் இந்த சீசனில் ஒரு போட்டியை தவிர வாட்சன் எந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடாதது சென்னை அணி ரசிகர்களுக்கு கவலையை கொடுத்தது.
2 . ராய்டு
இந்திய அணிக்காக விளையாடியுள்ள அம்பதி ராய்டு ஒருசில போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற உதவியுள்ளார். மேலும், இந்த ஐபில் சீசனில் இவர் மேலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த சீசனில் ஒருமுறைகூட ராய்டு அதிரடியாக விளையாடாமல் ஏமாற்றத்தையே கொடுத்தார்.
3 . பிராவோ
வெஸ்டிண்டிஸ் அணியின் மிக சிறந்த வேக பந்து வீச்சாளரான பிராவோ சென்னை அணிக்காக கடந்த 12 சீசனாக விளையாடி வருகிறார். ஆரம்பகாலத்தில் பவுலிங், பீல்டிங் , பேட்டிங் என ஜொலித்த பிராவோ சமீப காலமாக ஒரு போட்டியிலும் ஜொலிக்கவில்லை.
இதனால் மேற்கூறிய மூவரும் அடுத்த வருடம் சென்னை அணியில் இருந்து நீக்கப்பட்ட வாய்ப்புள்ளது. அல்லது எதிர்பாராத சில வீரர்கள் நீக்கப்பட்டு புது வீரர்கள் உள்ளே வரவும் அதிக வாய்ப்புள்ளது.