மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை அணியில் பல மாற்றங்கள்? முக்கிய வீரருக்கு இன்று இடம்? எல்லாத்துக்கும் அது ஒண்ணுதான் காரணம்.
சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதும் இன்றைய போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுவதால் சென்னை அணியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. மேலும் இன்றைய போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுவதால் சென்னை அணிக்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது.
ஷார்ஜா மைதானம் சிறியது என்பதால் ஏற்கனவே செம பார்மில் இருக்கும் டெல்லி அணி வீரர்கள் மிகவும் அதிரடியாக ஆடி அணியின் எண்ணிக்கை 200 கும் மேல் கொண்டுவர வாய்ப்புள்ளது. டெல்லி அணிக்கு நிகராக சென்னை அணியில் ஹிட்டர்கள் இல்லை என்பதால் சென்னை அணியில் இன்று கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. துபாய் மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருந்ததால் சென்னை அணியில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்கள் சேர்க்கப்பட்டனர். இன்று ஷார்ஜா மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஜெகதீசன் இன்று அணியில் சேர்க்கப்பட்ட வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவ்க்கு பதிலாக களமிறங்கிய ஜெகதீசன் 33 ரன்கள் சேர்த்தார். இதனால் ஜெகதீசனுக்கு இன்று அணியில் இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.