#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஐபில்: எந்த அணி எந்த இடம்? இறுதி கட்ட புள்ளி பட்டியல் விவரம்!
ஐபில் சீசன் 12 இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. முதல் சுற்று ஆட்டம் நேற்றுடன் முடிவு பெற்றுள்ள நிலையில் இரண்டாவது சுற்று ஆட்டம் நாளை முதல் ஆரம்பமாகிறது. முதல் சுற்றை பொறுத்தவரை 18 புள்ளிகளுடன் மும்பை அணி முதல் இடத்திலும் அதே 18 புள்ளிகளுடன் சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
சிறப்பாகா விளையாடி வந்த டெல்லி அணி ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்திலும், கைதராபாத் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி போராடி தோல்வி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் 12 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி 5 வது இடத்திற்க்கு சென்றது.
நேற்று சென்னை அணியுடனான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றபோதும் பஞ்சாப் அணி 6 வது இடத்திலையே உள்ளது. ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் 7 மற்றும் 8 வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் மும்பை மோதும் முதல் ஆட்டமானது நாளை சென்னையில் 7 . 30 மணிக்கு தொடங்குகிறது. டெல்லி மற்றும் கைதராபாத் அணிகள் மோதும் போட்டியானது நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெறவுள்ளது.