#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நிறுத்தப்பட்டது ஐபில் கிரிக்கெட் போட்டிகள்!! தொடர் கொரோனா பரவலால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு
கொரோனா பரவல் காரணமாக ஐபில் போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துவரும் நிலையில், ஐபிஎல் 2021-ன் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தையும், பயோ-பப்புள் பாதுகாப்பையும் மீறி கொரோனா வைரஸ் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்றைய போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் சிலருக்கும், ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது .
இதனால் ஐபில் போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாகவும், விரைவில் புது தேதி குறித்த அறிவிப்பு வெளிவரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரம் இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் இத்துடன் ரத்து செய்யப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.