மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஹா.. சூப்பர்.! மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ஒரு தோனி.! ரசிகர்களை புல்லரிக்க வைத்த மும்பை இந்தியன்ஸ் வீரர்.!
ஐபிஎல் போட்டியின் 15வது சீசன் இரண்டாவது லீக் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட்களை இழந்து 177 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 179 ரன்களை குவித்து அபார வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்காக ஏலத்தில் ரூ 15.25 கோடிக்கு வாங்கப்பட்ட இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வானவேடிக்கைகளை நிகழ்த்தினார். நேற்றைய ஆட்டத்தில் 48 பந்துகளை சந்தித்த அவர் 81 ரன்களை விளாசினார்.
Ishan Kishan with helicopter shot#ishankishan #DCvMI #IshanKishan pic.twitter.com/G6XbhYJtb4
— Trending Cric Zone (@rishabhgautam81) March 27, 2022
இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் சென்னை அணியின் தோனியை போலவே ஒரு அதிரடியான ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்தார், இதனையடுத்து மும்பை அணியிலும் ஒரு தோனி என கருத்துக்களை பதிவிட்டு இந்த வீடியோவை ரசிகர்களை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.