தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இனி எந்த வீரராலும் முடியாது.! புதிய சாதனையை படைக்க போகும் இஷாந்த் சர்மா.!
இந்தியா -இங்கிலாந்து இடையிலான இன்றைய பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன்மூலம் தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா.
இதுவரை 99 டெஸ்டுகளில் விளையாடியுள்ள 32 வயது நிரம்பிய இஷாந்த் சர்மா, 302 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் 80 ஒருநாள் போட்டிகளிலும், 14 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 19 வயதில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானதால் அவரால் 32 வயதுக்குள் 100 டெஸ்டுகளில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த மைல் கல்லை எட்டும் 11-வது இந்திய வீரர் இஷாந்த் சர்மா ஆவார். பந்து வீச்சாளர்களில் 4-வது வீரர் என்ற பெருமையையும், வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது வீரராக இடம் பிடிக்கிறார். கபில் தேவ்-க்குப்பிறகு 100 டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் இவர்தான்.
கபில் தேவ்க்கு பிறகு அந்தப் பெருமை இஷாந்த் சர்மாவுக்கு இன்று நடக்கும் இந்தியா- இங்கிகாந்து அணிகளுக்கான மூன்றாவது டெஸ்டில் கிடைக்கவுள்ளது. இதன்பிறகு வேறு எந்த இந்திய வேகப்பந்து வீச்சாளராலும் 100 டெஸ்டுகளில் விளையாடுவது கடினம் என கூறுகின்றனர் சக வீரர்கள்.