#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய மண்ணில் இங்கிலாந்து வீரர் நிகழ்த்தி வரும் அட்டகாசமான தொடர் சாதனை... என்ன தெரியுமா?
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்திய மண்ணில் அட்டகாசமான தொடர் சாதனை ஒன்றை நிகழ்த்தி வருகிறார்.
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் துவங்கியது. இந்த போட்டி இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டிற்கு 100 ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.
இன்றைய போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கிய ரூட் அரைசதம் விளாசி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய மண்ணில் அவர் விளையாடும் 7 ஆவது டெஸ்ட் போட்டி இது.
இன்றைய போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம் இந்திய மண்ணில் அவர் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளிலும் எதாவது ஒரு இன்னிங்சில் 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
73 & 20* Nagpur
124 & 4 Rajkot
53 & 25 Vizag
15 & 78 Mohali
21 & 77 Mumbai WS
88 & 6 Chennai
89* Chennai