தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இளம் வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோ ரூட்.!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்த டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தார். அவர் சரியாக 100 ரன்களை எட்டியபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை கடந்தார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும், உலகளவில் 14வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும், இளம் வயதில் (31) டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற அலஸ்டையர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.