மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளுடன் கிரிக்கெட் விளையாடிய கேன் வில்லியம்சன்.! காயத்திற்கு பின் முதல் போட்டி.!!
நியூசிலாந்து வீரரான கேன் வில்லியம்சன், நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார். இவருக்கு இந்தியாவிலும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது . மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் வில்லியம்சனுக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டது. இதனால், கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், வில்லியம்சன் தன் தாய்நாடான நியூசிலாந்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையே வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் வில்லியம்சன் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நியூசிலாந்து அணியின் ஆலோசகராக இருந்து அணியை வழிநடத்துவார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போது அவர் குணமடைந்து வரும் நிலையில், தனது மகளுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ தற்போது, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தனது மகளுடன் கிரிக்கெட் விளையாடும் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன்#kanewilliamson #Dinakarannews #WorldCup2023 pic.twitter.com/rNuFCs6Hzh
— Dinakaran (@DinakaranNews) July 4, 2023