மொத்த பாக்கிஸ்தான் வீரர்களுமே சேர்ந்து நெருங்க முடியாத சாதனை! கோலினா சும்மாவா



Kholi 25 pakistan 24 centuries

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2 போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்தார். 2017க்கு பிறகு கோலி 25 சதங்களை அடித்துள்ளார். அதே காலகட்டத்தில் பாகிஸ்தான் அணியின் அனைத்து வீரர்களுமே சேர்ந்து 24 சதங்கள் தான் அடித்துள்ளனர். 

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாக்கிஸ்தானுக்கு இடையே பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. அதில் முக்கியமான ஒன்று உலககோப்பை கிரிக்கெட் தொடர். இந்த தொடரில் இந்திய அணி, பாக்கிஸ்தானுடன் விளையாட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்தவண்னம் உள்ளன. 

cricket

இந்நிலையில் இந்தியா, பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையே ஒப்பீட்டு பார்ப்பதை ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர். அதில் ஒட்டுமொத்த பாக்கிஸ்தான் வீரர்களுமே சேர்ந்து கூட கோலியின் சாதனையை நெருங்க முடியவில்லை என்பதும் ஒன்று. 

ஆம், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் 41 சதங்களை பதிவு செய்துள்ளார் விராட் கோலி. அதிக சதங்களின் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார் கோலி. 

cricket

பல சாதனைகளுக்கு சொந்தகாரரான விராட் கோலி மிகக்குறைந்த காலகட்டத்தில் தனது கடைசி 25 சதங்களை விளாசியுள்ளார். அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து மட்டும் டெஸ்ட், ஒருநாள் என 25 சதங்களை அவர் அடித்துள்ளார். இதனை பாக்கிஸ்தான் வீரர்களுடன் ஒப்பிட்டுள்ள ரசிகர்கள், இந்த காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த பாக்கிஸ்தான் வீரர்களுமே சேர்ந்து 24 சதங்களை தான் விளாசியுள்ளதை கண்டறிந்துள்ளனர். 

இதனை பதிவிட்டு கோலி ஒருவருக்கு பாக்கிஸ்தான் அணி மொத்தமுமே சமன் என கருத்து தெரிவித்து வருகின்றனர். 2017 ஆம் ஆண்டிலிருந்து ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்கள் சேர்ந்து 77 சதங்களை விளாசியுள்ளனர்.