#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விராட் கோலியின் சதம் வீணாகிவிடுமா! மளமளவென சரியும் இந்திய அணியின் விக்கெட்டுகள்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி, உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி சார்பில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பும்ரா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜய் துவக்கத்திலேயே அவுட்டாகினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி, புஜாரா ஜோடி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். பொறுமையாக ஆடிய புஜாரா 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி அரைசதமடித்தார். பின்னர் வந்த ரஹானே சிறப்பாக ஆடி அவரும் அரை சதமடித்தார். இரண்டாம் நாள் ஆட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று துவங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தில் வந்த வேகத்திலேயே ரகானே 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து வந்த ஹனுமா விஹாரி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 25 ஆவது சதத்தை விளாசினார். இதன்மூலம் ஒரே ஆண்டில் 11 சர்வதேச சதங்களை இரண்டு முறை அடித்த சாதனையை விராட்கோலி படைத்தார்.
கேப்டன் கோலியுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய விராட் கோலி 123 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த சமி ரன் ஏதும் எடுக்காமல் வந்தவேகத்திலேயே வெளியேறினார். உணவு இடைவேளை நிலவரப்படி இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 14 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விட முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.