#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோலி ஓய்வு; நியூசிலாந்து அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா! இந்தியா முதலில் பேட்டிங்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்திற்கு எதிராக விளையாடி வருகிறது.
முதலில் நடந்த 4 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. கடைசி 2 போட்டிகளும் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய அணி முதல் முறையாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்தில் டி20 தொடரை கைப்பற்றியது. சொந்த மண்ணில் தொடர்ந்து 4 போட்டிகளிலும் தோற்ற நியூசிலாந்து அணியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் இன்று கடைசி மற்றும் 5 ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது. இன்று கேப்டன் கோலி ஆடவில்லை. கடந்த போட்டியில் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா இன்றைய போட்டிக்கு கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.