தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நேற்று நடந்த பரபரப்பான ஆட்டம்.! இறுதி ஓவரில் பஞ்சாப் அணியின் மரணமாஸ் ஆட்டம்.!
13-வது ஐ.பி.எல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில் சார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
இதனையடுத்து படிக்கல் மற்றும் பின்ச் பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கினர். படிக்கல் 18 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகினார். இதனையடுத்து ஆரோன் பின்ச் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக வாஷிங்டன் சுந்தர் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ஓரளவுக்கு நிதானமாக ஆடிய ஷிவம் துபே 23 ரன்களில் அவுட் ஆனார்.
டிவில்லியர்ஸ் 2 ரன்னில் வெளியேறினார். பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி48 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பெங்களூரு அணி ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் மற்றும் ஊடான இருவரும் சிறப்பாக ஆடி கடைசி ஓவரை வெளுத்துக்கட்டினர். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் முகமது ஷமி, முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வாலும், கேப்டன் லோகேஷ் ராகுலும் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். மயங்க் அகர்வால் 45 ரன்களில் அவுட் ஆனார். கிறிஸ் கெய்ல் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 177 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.