காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மும்பை அணியை வெளுத்து வாங்கி ஊதித்தள்ளிய கொல்கத்தா அணி.! தெறிக்கவிட்ட திரிபாதி.!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. நேற்றய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் குவிண்டன் டி காக் களமிறங்கினர்.
துவக்க வீரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே கொல்கத்தா வீரர்களின் பந்து வீச்சை சிக்சர்களாக பறக்க விட்டனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 33 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து சிறப்பாக விளையாடிய டி காக், ஐ.பி.எல் போட்டிகளில் தனது 16-வது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். துவக்க வீரர் சுப்மன் கில் 13 ரன்கள் எடுத்தநிலையில் பும்ரா பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி, வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தநிலையில், கொல்கத்தா அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.