ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவை சீரழித்த 45 நிமிடங்கள்! கோலியின் உருக்கமான கடைசி உரை



Kohlis last speech in worldcup 2019

2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஆட்டத்தின் முடிவில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியதாவது, "ஆட்டத்தின் முதல் பாதியில் நாங்கள் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். எட்டக்கூடய இலக்கில் நியூசிலாந்தை சுருட்டிவிட்டோம் என நினைத்தோம். 

wc2019

ஆனால் நியூசிலாந்து அணி பந்துவீச்சில் முதல் அரை மணி நேரத்திலேயே அனைத்தையும் மாற்றிவிட்டது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்துகளை குத்த செய்து திறமையை நிரூபித்துவிட்டனர். இரண்டு ஆட்டங்களிலும் ஜடேஜா தனது முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

தோனி சிறப்பாக கைக்கொடுத்தார். மயிரிழையில் ஆகிய ரன் அவுட் மயிரிழையில் எங்களை தோற்கடித்தது. தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி 45 நிமிட மோசமான ஆட்டத்தால் நாங்கள் வெளியேறிவிட்டோம். நல்ல கிரிக்கெட்டை இதுவரை ஆடியுள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது. 

wc2019

கடைசி வரை நம்பிக்கையுடன் போராடும் அணி தான் வெல்லும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்று நியூசிலாந்து கடைசிவரை நம்பிக்கையுடன் போராடியதால் எங்களை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பல எண்ணிக்கையில் வந்து உற்சாகப்படுத்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி" என கோலி உறையை முடித்தார்.