மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த குளறுபடி! அம்பையர் தர்மசேனா அதிரடி விளக்கம்
இங்கிலாந்தில் அந்த முடிந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் பல சுவாரசியங்கள் நடைபெற்றன. இதில் முக்கியமானது நான்காவது பந்தில் அரங்கேறிய ஓவர்த்ரோ. 5 ரன்களுக்கு பதிலாக 6 ரன்களை அம்பையர் வழங்கியதால் இறுதிப் போட்டியின் முடிவு தலைகீழாக மாறியது.
பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத அந்த இறுதிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனா மற்றும் எராஸ்மஸ் ஆகியோர் களத்தில் நடுவர்களாக செயல்பட்டனர். கடைசி ஓவரில் 5 ரன்களுக்கு பதிலாக 6 ரன்களை அளித்தது தவறுதான் என அம்பையர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.
இறுதிப் போட்டி முடிந்தவுடன் ஐசிசியின் முன்னாள் புகழ்பெற்ற நடுவரான சைமன் டஃப்பல் அந்த ஓவர்த்ரோ விஷயத்தை விளக்கிக் கூறி அனைவருக்கும் புரிய வைத்தார். நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை தவற விட்டதற்கு இது தான் முக்கிய காரணம் என நடுவர்கள் மீது ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அப்போது களத்தில் நடந்தது என்ன என்பதை விளக்கிக் கூறியுள்ளார் தர்மசேனா. “கடைசி ஓவரில் நடைபெற்ற அந்த ஓவர்த்ரோவை உடனடியாக ரீப்ளே செய்து பார்க்கும் அனுமதி எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் களத்தில் இருந்த மற்றொரு நடுவரான எராஸ்மஸ் மற்றும் மூன்றாவது நடுவரிடம் ஆலோசனை செய்த பிறகே நான் 6 ரன்களை இங்கிலாந்து அணிக்கு அளித்தேன். உடனடியாக ரீப்ளே செய்யும் வசதி எங்களுக்கு கிடைத்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.