மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புள்ளிப் பட்டியலை புரட்டி போடப்போகும் பரபரப்பான கடைசி போட்டி! பழிதீர்க்குமா மும்பை
2019 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். அதே நேரத்தில் மும்பை அணி வென்றால் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும்.
பரபரப்பான இந்த ஆட்டத்தை கொல்கத்தா மற்றும் மும்பை ரசிகர்களை விட ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் தான் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். காரணம் இந்த போட்டியின் முடிவை பொறுத்து தான் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா இல்லையா என்பது தெரியும்.
மேலும் மும்மை அணி வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் குவாலிபயர் 1 போட்டியில் ஆடும். டெல்லி அணி பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்து எலிமினேட்டர் போட்டியில் ஆடும் நிலை உருவாகும்.
புள்ளிப் பட்டியலில் பல மாற்றங்களை ஏற்படுத்தவிருக்கும் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.