#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்? இன்று பரபரப்பான கடைசி லீக் போட்டி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒரு பிரிவிற்கு 5 அணிகள் வீதம் இரு பிரிவுகளாக லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் A பிரிவில் இடம்பெற்ற இந்தியா முதலிடமும் ஆஸ்திரேலியா இரண்டாமிடமும் பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.
B பிரிவை பொறுத்தவரை இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டாலும் எந்த அணி முதலிடம் பிடிக்கும் என்பதை நிர்ணயிக்கும் போட்டி இன்று தான் நடைபெறுகிறது. ஏற்கனவே விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வென்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்று வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றால் அரையிறுதியில் அந்த அணி ஆஸ்திரேலியாவையும் இந்திய அணி இங்கிலாந்தையும் எதிர்கொள்ளும். ஒருவேளை தென்னாப்பிரிக்கா தோல்வியுற்றால் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி ஆஸ்திரேலியாவுடனும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணி இந்தியாவுடனும் மோதும்.