மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்றைய போட்டியில் இது மட்டும் நடந்தால் போதும்..!! ப்ளே-ஆப் கதவுகள் தானாக மூடும்..!!
லக்னோவில் இன்று நடைபெறும் 63 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 62 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. லக்னோவில் இன்று நடைபெறும் 63 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
லக்னோ அணி இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என்ற கணக்கில் 13 புள்ளிகள் பெற்று 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ப்ளே-ஆப் சுற்றுக்கு நேரடியாக தகுதிபெறும். ஒரு போட்டியில் வெற்றியும், மற்றொரு போட்டியில் தோல்வியும் கண்டால் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.
மும்பை அணி இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்று 7 வெற்றி, 5 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ப்ளே-ஆப் சுற்றுக்கு நேர்டியாக தகுதி பெறுவதுடன் புள்ளி பட்டியலில் 2 ஆம் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. இதில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியதில், இரண்டு முறையும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது. முதல் சுற்றில் நடைபெற்ற 7 போட்டிகளில் 5 ல் தோல்வியடைந்து துவண்ட மும்பை அணி அடுத்த சுற்றில் 5 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றிகளுடன் நல்ல நிலையில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியம் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக மல்லுக்கட்டும்.