குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
விராட் கோலி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் போலில்லை.! வெளிப்படையாக கூறிய மேத்யூ ஹைடன்.!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பையில் நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செமி பைனல் நடந்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் ஆடப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதியது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தநிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விராட் கோலி, பாபர் அசாம் இருவரில் யார் சிறந்தவர்கள்? என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்கள். இதற்கு பதில் அளித்த மேத்யூ ஹைடன், நான் பார்க்கும் விதத்தில் இவர்கள் இருவரும் எதிர்மாறாக இருக்கிறார்கள்.
விராட் கோலியைப் போலல்லாமல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மிகவும் ஆரவாரமாக இல்லை, மேலும் ஆடுகளத்தில் அமைதியான நடத்தையைப் பேணுகிறார். பாபர் மிகவும் உறுதியான மற்றும் நிலையாக விளையாடக்கூடியவர். பாபர் அசாம் பெரும்பாலான நேரங்களில் மிகவும் அமைதியாக இருக்கிறார், மேலும் அவரது கேப்டன்சியில் மற்றும் பேட்டிங்கில் உன்னிப்பாக இருக்கிறார்.
அதேநேரத்தில் விராட் கோலி மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார் மற்றும் களத்தில் மிகவும் ஆரவாரமாக இருக்கிறார். பேட்டிங்கில் கோலி அதிகம் சாதித்துள்ளார் என ஒப்புக்கொண்ட ஹைடன், ஆனால், கோலியுடன் ஒப்பிடும்போது பாபர் மிகவும் இளம் வயதாக இருப்பதாக குறிப்பிட்டார். பாபர் அசாம் ஒரு இளம் கேப்டனாக இருக்கிறார், அவர் தினமும் கற்றுக்கொள்கிறார் மற்றும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறன் உடையவர் என ஹைடன் புகழ்ந்துள்ளார்.