மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2023 கிரிக்கெட் உலக கோப்பையை அறிமுகம் செய்த நடிகை மீனா!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, பின்னர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நட்சத்திர நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் வித்யாசாகரை 2009 இல் திருமணம் செய்தார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் குழந்தை நடிப்பில் தெறி படத்தில் மிரள வைத்துள்ளார். சமீபத்தில் இவரது கணவர் இறந்துவிட்டார்.
இந்த நிலையில், நடக்கவிருக்கும் 2023 ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக்கோப்பையை நடிகை மீனா பாரிசில் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனால், உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை மீனா பெற்றிருக்கிறார்.