ரோகித் மற்றும் கோலியை பின்னுக்குத் தள்ளிய மிதாலி ராஜ்! இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெருமிதம்



mithali-ahead-of-rohit-and-kholi

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்று அயர்லாந்துடன் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிதாலி ராஜ் 56 ரன் 51 ரன்கள் எடுத்தார்.

mithali ahead of rohit and kholi

35 வயதான மிதாலிராஜ் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 2283 ரன்கள் அடித்துள்ளார். இந்தியா அளவில் ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை சர்வதேச டி20 போட்டிகளில் அதிகபட்சமான ரன்களை குவித்து முதலிடம் பிடித்துள்ளார். மிதாலிராஜ் இந்திய ஆண்கள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

ரோகித் சர்மா 2207 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், விராட்கோலி 2102 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.