பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தோனி கடத்த ஆட்டத்தின் போதே சொன்னார்.. ஆனால் சர்ச்சை ஆனது.! ஆனால் நேற்றைய ஆட்டத்தில் உண்மை ஆனது.!
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 41வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. நேற்றைய ஆட்டம் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதால் பேட்ஸ்மேன்கள் அதிகப்படிய ரன்கள் குவிக்க ஏதுவான மைதானம் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அந்த மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயங்கர மோசமாக ஆடியது.
நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக சாம் கரன் மட்டும் 47 பந்துகளை சந்தித்து 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 114 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனை மும்பை அணியின் துவக்க வீரர்கள் இருவர் மட்டுமே களமிறங்கி சென்னை அணியை மிக எளிதில் வென்றனர்.
சென்னை அணி கடந்த போட்டியில், அதாவது ஐபில் 13 வது சீசன் T20 போட்டியின் 37 வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியபோது முதலில் பேட்டிங் செய்து சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதனை ராஜஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 126 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றிபெற்றது.
அந்த ஆட்டம் முடிந்தவுடன் தோனி பேசுகையில், இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என கூறினார். அவர் கூறிய கருத்து அப்போது கடும் விமர்சனத்துக்குள்ளானது. கடந்த ஆட்டத்தின்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் முக்கிய வீரர்களை அணியில் இருந்து தூக்கிவிட்டு, இளம் வீரர்களை அணிக்குள் எடுத்தது.
ஆனால் நேற்று இறங்கிய சிஎஸ்கே அணியின் இளம் வீரர்கள் மொத்தமாக சொதப்பியதால் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்வதற்கு காரணமாக அமைந்தது. நேற்றைய ஆட்டத்தில் புதிதாக இறக்கப்பட்ட ஜெகதீசன், ரூத்துராஜ் இரண்டு பேருமே சரியாக ஆடவில்லை. இருவருமே டக் அவுட் ஆனார்கள். கடந்த ஆட்டத்தில் தோனி சொன்னது போலவே இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என கூறியது நேற்றைய ஆட்டத்தில் உண்மை ஆனது.