திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு தோனி, ரசிகர்களை நோக்கி வீசியது என்ன.? வைரலாகும் வீடியோ.!
கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 16 வது சீசனில், இதுவரை 61 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 61 வது லீக் போட்டியில், சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி18.3 ஓவரில் 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
𝙔𝙚𝙡𝙡𝙤𝙫𝙚! 💛
— IndianPremierLeague (@IPL) May 14, 2023
A special lap of honour filled with memorable moments ft. @msdhoni & Co. and the ever-so-energetic Chepauk crowd 🤗#TATAIPL | #CSKvKKR | @ChennaiIPL pic.twitter.com/yHntEpuHNg
இந்நிலையில் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக, சிஎஸ்கே அணி நிர்வாகம், போட்டியின் முடிவில் மைதானத்தில் அந்த அணி சார்பாக, ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து போட்டியின் முடிவில் தோனி, மைதானத்தை சுற்றி நடந்து கொண்டே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டீசர்டுகளை ரசிகர்களை நோக்கி வீசினார். மேலும், அவரை பின் தொடர்ந்து வந்த சென்னை அணியின் மற்ற வீரர்களும் டென்னிஸ் பந்துகளை ரசிகர்கள் மீது வீசி தங்களது நன்றியை தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.