திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மைதானத்தில் கெட்ட வார்த்தை பேசும் தல தோனி?... கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா பரபரப்பு குற்றச்சாட்டு.! தோனி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி உலக கோப்பை, டி20 போன்ற பல்வேறு கோப்பைகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.
மைதானத்தில் வீரர்களை வழிநடத்தி சென்று அமைதியாக காணப்படும் தோனியை ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் கூல் கேப்டன் என்று அழைப்பர். இந்நிலையில் தோனியின் மறுபக்கம் குறித்து வேக பந்துவீச்சாளரான இஷாந்த் ஷர்மா கூறிய கருத்தால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவர் பேசுகையில், மாஹி பாய்க்கு பல திறமைகள் இருக்கின்றன. அந்த திறமைகளில் அமைதியாகவும், கூலாகவும் இருப்பது ஒன்றல்ல . மைதானத்தில் அவர் கேவலமான கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார். அதனை நானே கேட்டிருக்கிறேன்.
ஐபிஎல் போட்டியாக இருந்தாலும், இந்திய போட்டியாக இருந்தாலும் வீரர்கள் அவரை சுற்றியே எப்போதும் இருப்பார்கள். நான் பந்து வீசி முடித்தவுடன் மகி என்னிடம் நீ சோர்வாக இருக்கிறாயா? என்று கேட்டால், நான் ஆமாம் நிறைய என்று பதிலளித்தேன்.
அவர் உனக்கு வயதாகிறது. வெளியேறு என்று கூறினார். தோனி பந்தை எரியும்போது அதனை கேச் பிடிக்காமல் தவறவிட்ட நேரத்தில் அவர் கோபமாக இருந்து நான் பார்த்ததில்லை. முதல் முறை பார்த்தேன். இரண்டாவது முறை அது என்னும் தீவிரமாக இருந்தது என்று கூறினார்.