மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்து மும்பை அணி எந்த வருடம் கோப்பையை வெல்லும் தெரியுமா? சுவாரசியத்தை நீங்களே பாருங்கள்!
ஐபிஎல் 12 வது சீசன் பரபரப்பாக நடந்து முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதியது. சென்னை அணிதான் வெற்றி பெரும் என்ற நிலையில் இருந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி மும்பை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் மும்பை அணி நான்காவது முறையாக ஐபிஎல் தொடரை வென்று, இதுவரை அதிக முறை ஐபிஎல் தொடரை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதனையடுத்து மும்பை அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
இந்தவருடம் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியதில், அந்த அணி ஐபிஎல் தொடரில் வெற்றி பெறுவதில் ஒரு சுவாரசியம் ஏற்பட்டுள்ளது. அதாவது மும்பை அணி அடுத்து 2021இல் தான் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 2013, 2015, 2017, 2019 போன்ற வருடங்களில் அதாவது ஒரு வருடம் விட்டு ஒருவருடம் வெற்றி பெற்று வரும் மும்பை அணி, இதே கணக்கில் சென்றால், அடுத்து 2021ல் ஐபிஎல் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.