தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
முதல் அணியாக ப்ளே-ஆப் சுற்றில் நுழையுமா குஜராத்..?!! மும்பையுடன் இன்று மோதல்..!!
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 57 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 56 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 57 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4 இடத்தை பிடித்துள்ளது அந்த அணி ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற, எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். இந்த தொடரில் அந்த அணி 4 முறை 200 ரன்களுக்கு மேலான இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சாம்பியனான குஜராத் அணி இதுவரை 11 போட்டிகளில் பங்கேற்று 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. குஜராத் அணி பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சம பலத்துடன் வலுவான அணியாக உள்ளது. கடைசியாக விளையாடிய 2 லீக் போட்டிகளில் ராஜஸ்தான், லக்னோ அணிகளை வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்கும் குஜராத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ப்ளே-ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழையும்.
குஜராத் அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த மும்பை அணி இந்த போட்டியில் பதிலடி கொடுப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க மல்லுக்கட்டும். இந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்க குஜராத் அணி போராடும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.