தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அடுத்த சுற்றுக்கு அடித்தளமிடப் போவது யார்..?!! மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்..!!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 54 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 53 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 54 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் பின்தங்கியுள்ளது. மீதமுள்ள 4 லீக் போட்டியும் அந்த அணிக்கு முக்கியமானது. எஞ்சிய 4 லீக் போட்டியிலும் வெற்றி பெற்றால் தான் ப்ளே-ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் களம் காணுகிறது.
மும்பை அணியின் பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் பார்முக்கு திரும்பிய போதும் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை கொடுக்கிறது.
பாப்-டூ-பிளசி தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் 6 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த அணியும் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்குகிறது.
அந்த அணியின் பேட்டிங் வரிசையில் பாப்-டு-பிளிசி 511, விராட் கோலி 419 தொடக்க வரிசையில் வலுசேர்க்கின்றனர். மிடில் வரிசையில் மேக்ஸ்வெல் ஒரு சில போட்டிகளில் மட்டுமே அதிரடியை தொடர்ந்துள்ளார். இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 31 போட்டிகளில் மோதியதில் மும்பை 17, பெங்களூரு 14 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.