மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்குழந்தை பிறந்தால் கடுவுள் கொடுத்த வரம்.! கடவுளே தனக்கு வரமாய் கிடைப்பது பெண்குழந்தை.! நடராஜனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.!
சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஐ.பி.எல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி இந்த வருட ஐபிஎல் தொடரில் யார்க்கரில் புதிய சாதனையை படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணி இறுதி ஓவர்களில் நடராஜனையே நம்பி இருந்தனர். அதற்க்கு காரணம் நடராஜன் வீசும் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் பலர் திணறியதே என்று சொல்லலாம்.
சேலம் மண்ணின் மைந்தர் நடராஜன் ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இவரது பந்து வீச்சை பார்த்த முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலர் நடராஜனை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பான பந்துவீச்சை நடராஜன் வெளிபடுத்தியதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.
Sending all our love and good wishes to @Natarajan_91 & Pavithra Natarajan on their new born baby 🧡#SRH #OrangeArmy pic.twitter.com/Sy9RgqbTjJ
— SunRisers Hyderabad (@SunRisers) November 6, 2020
ஐ.பி.எல் தொடருக்காக தற்போது துபாயில் இருக்கும் நடராஜன் இதனை முடித்துவிட்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜனுக்கு கடந்த 6 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை சன்ரைசர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு சமீபத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. நடராஜனுக்கு பெண்குழந்தை பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் கிடைத்து, இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் நடராஜன். இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பெண்குழந்தை பிறந்த நேரம் கடுவுளே அவர் வீட்டிற்கு வந்துள்ளது என நடராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.