தமிழக வீரர் நடராஜனுக்கு கான்ட்ராக்ட் கொடுக்காத பிசிசிஐ.! என்ன காரணம் தெரியுமா.?



natarajan not in BCCI contract

இந்திய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2021ம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. 

பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 3 வடிவிலான போட்டிகளிலும் அறிமுகமாகி கெத்து காட்டிய தமிழக வீரர் நடராஜன் பெயர் இடம்பெறவில்லை. இதேப் போன்று மனிஷ் பாண்டே பெயரும் இந்த பட்டியலில் இல்லை. தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தற்போது நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில், அவருக்கு பிசிசிஐ அமைப்பு கான்ட்ராக்ட் கொடுக்கவில்லை.

cricketஆனால் இதற்கு பின் எந்த விதமான புறக்கணிப்பும் இல்லை என கூறப்படுகிறது. இந்திய அணியில் பிசிசிஐ கான்ட்ராக்ட் பெற வேண்டும் என்றால் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் 10 டி 20 போட்டிகளில் ஆடி இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் நடராஜன் இரண்டு ஒருநாள், ஒரு டெஸ்ட், நான்கு டி 20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். இதனால் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை.