#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கேப்டன் பதவிக்கு விராட் கோலிக்கு இன்னும் முன்னேற்றம் வேண்டும்! முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பேச்சு!
பல நாடுகளுக்குச் சென்று விளையாடி வந்த கிரிக்கெட் வீரர்கள் கொரோனா காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதே ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக உள்ளது.
இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது அவர் பேசுகையில் இந்திய கிரிக்கெட் அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு நீண்ட காலம் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
கிரிக்கெட் வீரராக விராட்கோலிக்கு எந்தவித அங்கீகாரமும் தேவையில்லை. பேட்டிங் சாதனைகளே அவரை பற்றிய முழுமையான கதையையும் சொல்லும். ஆனால் கேப்டன் பதவியை பொறுத்தவரை அவர் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என கருதுகிறேன். அவர் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய கேப்டன் என்று என்னால் சொல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.
தோனி அளவிற்கு விராட் கோலிக்கு பொறுமை சற்று குறைவு என்பது அணைத்து ரசிகர்களுக்கும் தெரியும். இந்தநிலையில் நெஹ்ராவின் கருத்து ஏற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது எனவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.